News May 29, 2024
தென் கொரியாவை வம்புக்கு இழுக்கும் வட கொரியா

தென் கொரியா எல்லைக்குள் வட கொரியா 260க்கும் மேற்பட்ட ராட்சத பலூன்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குப்பைகள், கழிவுகள் உள்ளிட்ட சில பொருட்களை போடுவதற்காக அந்த ராட்சத பலூன்கள் அனுப்பப்பட்டதாகவும், அதில் இருந்த பொருட்களை ராணுவ வெடிமருந்து பிரிவினர் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு தென் கொரியா அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 26, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

<<18304103>>அரையாண்டு தேர்வு அட்டவணையை<<>> வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. டிச.23 அன்று மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடையும். இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும். அதன்பின், 10 நாள்களில் பொங்கல் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.
News November 26, 2025
உலகின் மிக அழகான கோட்டைகள் PHOTOS

கோட்டைகள், அரண்மனைகள் என்றாலே, ஏதோவொன்று நம்மை ஈர்க்கிறது. அவை, வரலாற்று கதைகளா, பிரம்மாண்டமான கட்டட கலையா, எது என்று தெரியவில்லை. ஆனால், நாம் வியந்து போகிறோம். அந்த வகையில், மிக அழகான கோட்டைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு கோட்டையும் இடம்பிடித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க.
News November 26, 2025
புஜாராவின் மைத்துனன் தற்கொலை

ராஜ்கோட்டில், கிரிக்கெட் வீரர் புஜாராவின் மைத்துனன் ஜீத் பபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் தான், Ex-Fiance கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஜீத் பபாரி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீள்வதற்கு வழிதெரியாமல் தான் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.


