News May 29, 2024
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நடத்தப்பட்ட சாராய ரெய்டுகளில் 8290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8362 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து 12 நான்கு சக்கர வாகனங்களும்,3 மூன்று சக்கர வாகனங்களும், 46 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2232 லிட்டர் கள்ள சாராயமும் 79,727 புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
விழுப்புரத்தில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

விழுப்புரம் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <
News August 22, 2025
விழுப்புரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் உடற்கல்வி ஆசிரியர் கைது!

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சிவபாலன். பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (ஆகஸ்ட் 22) பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் சிவபாலனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.