News May 29, 2024
மோடி மறைமுக பரப்புரையில் ஈடுபடுகிறார்: காங்கிரஸ்

பிரதமரின் கன்னியாகுமரி தியான நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமரின் மறைமுக பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும், நிகழ்ச்சிக்கு தடை கோரி திமுக புகார் அளித்துள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மே 31 முதல் 2 நாள்களுக்கு இரவு பகலாக மோடி தியானம் செய்ய உள்ளார்.
Similar News
News November 27, 2025
சிவகங்கை: கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன்

சிவகங்கை மாவட்டம், கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் வருகின்ற 28.11.2025 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
திமுகவிற்கு ரெட் அலர்ட் ஆரம்பம்: அருண்ராஜ்

விஜய்யை சந்தித்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் அவர் தவெகவில் இணைவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த இணைப்பு குறித்து தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒருநாள் காத்திருங்கள் நல்ல செய்தி வரும் என தெரிவித்த அவர், திமுகவிற்கு ரெட் அலர்ட் ஆரம்பம் என்றும் கூறியுள்ளார். செங்கோட்டையன் இணைப்பு திமுகவிற்கு எந்த வகையில் சவாலாக இருக்கும்?
News November 27, 2025
TVK-ல் செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு?

TVK-ல் இணையவுள்ள செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. TVK நிர்வாக குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டலத்தில் TVK-வின் வெற்றியை உறுதிசெய்யும் பொருட்டு அம்மண்டல பொறுப்பாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், விஜய்யிடம் நேரடியாக செங்கோட்டையன் ரிப்போர்ட் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


