News May 29, 2024
ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து பலி

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மஜு (44). இவர் தூத்துக்குடி இபி காலனியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று பணியில் இருந்தபோது திடீரென இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாராம். இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
தூத்துக்குடி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி!

தூத்துக்குடி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 10, 2025
தூத்துக்குடி: கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களை தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவியாளர் ஆனந்த் பிரகாஷிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
தூத்துக்குடி: வங்கி வேலைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<