News May 29, 2024
ரஃபாவை விட்டு வெளியேறும் அப்பாவி பாலஸ்தீனர்கள்

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, ரஃபா நகரின் மையப் பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருவதால், அப்பகுதி மக்கள் வெளியேறி வருகின்றனர். நேற்று முன்தினம், ரஃபாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் ராணுவம் தீவிரத் தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக, கிடைக்கும் வாகனங்களில் ஏறி பாலஸ்தீனர்கள் அங்கிருந்து
வெளியேறி வருகின்றனர்.
Similar News
News September 6, 2025
மீண்டும் ஒரு புதிய அணியா?

செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்பை EPS பறித்துள்ளது, மீண்டும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. MGR காலத்தில் இருந்தே கட்சி பல நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும், 1988-ல் ஜெ-ஜானகி அணிகளாக பிளவுபட்டு மீண்டும் இணைந்தது. 2017-ல் சசிகலா-OPS அணி, அதன்பின் EPS-OPS, அணி என பிளவுகளை சந்தித்து பலவீனமடைந்துள்ளது. இந்நிலையில், செங்கோட்டையன் நீக்கம் கட்சியில் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்துமா?
News September 6, 2025
1 மணி தலைப்புச் செய்திகள்

*அதிமுக பொறுப்புகளில் இருந்து <<17629139>>செங்கோட்டையன் நீக்கம்<<>>
*<<17628210>>இந்தியா – அமெரிக்கா<<>> மீண்டும் நெருக்கம்
*ஜெர்மனி பயணத்தால் ₹<<17627007>>15,516 கோடி முதலீடு<<>>: CM ஸ்டாலின்
*<<17628629>>விஜய் உடன் கூட்டணி<<>>? TTV தினகரன் பதில்
*<<17627852>>தங்கம் விலை <<>>மீண்டும் உயர்வு
*<<17626530>>FIDE Grand Swis<<>>s: டிராவில் முடித்த குகேஷ்
News September 6, 2025
விளக்கம் கேட்காமல் பதவி பறிப்பு: செங்கோட்டையன்

தன்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று தான் கூறியதைப்போல் ஒருங்கிணைப்பு பணி தொடரும் எனவும் கூறியுள்ளார். மேலும், பொதுச்செயலாளருடன், 6 பேர் கொண்ட குழு சந்தித்து ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசியது உண்மை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.