News May 29, 2024
9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் 1ஆம் தேதி பருவமழை தொடங்கவிருப்பதால் அதன் தாக்கம் தமிழகத்தில் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
டிராவிட்டை குறிவைக்கும் 3 IPL அணிகள்

கடந்த IPL சீசனில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் ராகுல் டிராவிட் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வரும் சீசனுக்கு டெல்லி, கொல்கத்தா, லக்னோ அணிகள் ராகுல் டிராவிட் இடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்தான அறிவிப்பு மினி ஏலத்திற்கு முன்னர் வர வாய்ப்புள்ளது.
News September 18, 2025
தவெகவை வேரிலேயே கிள்ளி எறியணும்: வினோஜ் பி.செல்வம்

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எப்படியெல்லாம் வளர்ச்சியை தடுத்ததோ, அப்படி இப்போது தவெக செயல்படுவதாக வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய்யை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நக்சல்களின் மனநிலையில் தவெக என்ற கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதை (தவெக) வேரிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை உறுதியுடன் கட்டாயம் செய்து முடிக்க வேண்டியது நமது கடமை என கூறியுள்ளார்.
News September 18, 2025
கவினை ஆணவக்கொலையை குடும்பமே திட்டமிட்டது: CB-CID

கவின் ஆணவக்கொலையில் காதலியின் தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக கோர்ட்டில் CB-CID தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கவினை சுர்ஜித் கொலை செய்தது தனது பெற்றோருக்கு தெரியாது என பெண் கூறியிருந்தார். ஆனால் தற்போது, சுபாஷினியின் காதல் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்பதால் கவினை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாக CB-CID கூறியதால், பெண்ணின் தந்தை SI சரவணனின் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது.