News May 29, 2024
ஆவின் நிறுவன ஓட்டுநர்களின் போராட்டம் வாபஸ்

திருச்சி கொட்டப்பட்டு நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் செயல்படும் வேன்களுக்கான வாடகை சுமார் இரண்டு மாதமாக நிலுவையில் இருந்ததால் வேன் உரிமையாளர்கள் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 80 லட்சம் லிட்டர் பால் விநியோகம் தடைபட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இன்று மாலை வழக்கம் போல் பால் விநியோகம் தொடரும் என தெரிவித்தனர்.
Similar News
News September 10, 2025
திருச்சி: புதிய ரூட்டில் விஜய் பிரச்சார பயணம்

திருச்சியில் வரும் 13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே வழங்கபட்ட வழித்தடங்களை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய வழிதடம்
டிவிஎஸ் டோல் கேட் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி, போஸ்ட் ஆபிஸ் ரவுண்டானா, பாரதியார் சாலை,பாலக்கரை, மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரச்சார பேச்சு ,சத்திரம் செல்லாமல் பால்பண்ணை வழியாக அரியலூர் செல்ல உள்ளார்.
News September 10, 2025
திருச்சி கலெக்டர் கொடுத்த முக்கிய அப்டேட்

திருச்சி குழந்தை உதவி மைய அலகில் ஒரு வருட தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, 3 மேற்பார்வையாளர் பணியிடம், 3 வழக்குபணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான படிவத்தை https://tiruchirappalli.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 24-ம் தேதிக்குள் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் இரு தினங்கள் ரத்து

பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது வரும் 11, 12 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 8:35 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW