News May 29, 2024
ஒரே நாளில் தமிழகம் வரும் மோடி, அமித் ஷா

பாஜகவின் முக்கியத் தலைவர்களான மோடி மற்றும் அமித் ஷா இருவரும் நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தர இருக்கின்றனர். 3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கு தியானத்தில் ஈடுபடவுள்ளார். அதேபோல, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் புதுக்கோட்டை திருமயம் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார். தேர்தல் வெற்றிக்காக அமித் ஷா கடவுளை வழிபடவுள்ளார்.
Similar News
News September 6, 2025
நேற்று செங்கோட்டையன்; இன்று அடுத்த தலைவர்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என EPS-க்கு, செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்திருந்தார். இந்நிலையில், காலை 10.30 மணிக்கு, டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டை அறிவிக்கிறார். மதுரையில் மூக்கையா தேவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடக்கவிருக்கிறது. NDA கூட்டணியிலிருந்து விலகியது குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளார்.
News September 6, 2025
முதுகு வலியை விரட்டும் யோகா!

➤சப்பளங்கால் உட்கார்ந்து, பின்னால் சாய்ந்து படுக்க வேண்டும்.
➤மூச்சை வெளிவிட்டு முதுகை வளைத்து மார்பு மேல் நோக்கி இருக்க வேண்டும்.
➤கைகளை பின்னால் நீட்டி, பிறகு தலையின் பின்னால் மடக்கி அரைநிமிடம் இருக்க வேண்டும்.
➤இதேபோல் கால்களை மாற்றி செய்ய வேண்டும்
➤பலன்: மார்பு நன்றாக விரிவடைகிறது. முதுகு தண்டு வலுவடையும். SHARE IT.
News September 6, 2025
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை: நயினார் விளக்கம்

நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதால், பாஜகவில் வாரிசு அரசியல் என திமுகவினர் விமர்சித்து வந்தனர். ஆனால், தான் பாஜகவுக்கு வருவதற்கு முன்பே கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பாலாஜி இருந்தார் என்றும், பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் நயினார் விளக்கம் அளித்துள்ளார். 1989-ல் அதிமுகவில் இணைந்த அவர், ஜெ., மறைவுக்கு பிறகு 2017-ல் BJP-ல் இணைந்தார்.