News May 28, 2024
தவறான செய்தி: திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் எச்சரிக்கை

சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர் பாஜகவில் இணையப்போவதாக சிலர் வதந்தியை பரப்பி விட்டுள்ளனர். இந்நிலையில், “என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் தவறான, பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 26, 2025
ஆன்லைனில் ஆடை trial பார்க்கும் சூப்பர் App

இனி ஆன்லைனில் ஆர்டர் செய்த ஆடை நமக்கு பிட் ஆகுமா என்ற கவலையே வேண்டாம். ‘Google Doppl’ AI ஆப் மூலம், ஆடை பிட் ஆகுமா இருக்குமா என்பதை அணியாமலேயே அறிய முடியும். உங்களுக்கு பிடித்த ஆடைகளை இந்த ஆப்பில் அப்லோட் செய்தாலே, அதை உங்களுக்கு அணிவித்து காட்டும். இதை வைத்து நாம் ஆடைகளை ஈஸியாக செலக்ட் செய்யலாம். தற்போது USA-ல் சோதனையில் உள்ள இச்செயலி, விரைவில் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
News November 26, 2025
ஓபிஎஸ், டிடிவி தினகரனின் பிளான் தோல்வியா?

அதிமுக ஒருங்கிணைப்பு என்ற திட்டத்திலிருந்து செங்கோட்டையன் பின் வாங்கியதன் விளைவே மாற்றுக் கட்சியில் இணையும் முடிவு. தவெகவா (அ) திமுகவா என்பதை மட்டுமே அவர் இன்னும் இறுதி செய்யவில்லை. இதுவொருபுறம் இருக்க, அதிமுக ஒருங்கிணைப்பு என செங்கோட்டையன் வாயிலாக காய்நகர்த்தி வந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனின் முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News November 26, 2025
ALERT: 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், நவ.29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த RED ALERT-யை X தளத்தில் இருந்து IMD நீக்கியுள்ளது. அதேநேரம், நவ.29-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது.


