News May 28, 2024
கேன்ஸ் விருது பெற்றவர்களுக்கு கமல் வாழ்த்து

கேன்ஸ் திரைப்பட விழா-2024இல் விருது வென்ற பாயல் கபாடியா, அனசுயா செங்குப்தா ஆகியோருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இருவரது சாதனையும் இந்திய சினிமாவின் தாழ்வாரங்களுக்குள் ஆழமாக எதிரொலிப்பதாக புகழ்ந்துள்ளார். ஷேம்லஸ் படத்திற்காக நடிகை அனசுயா செங்குப்தா, ALL WE IMAGINE AS LIGHT படத்திற்காக பாயல் கபாடியாவுக்கு விருது வழங்கப்பட்டது.
Similar News
News September 6, 2025
GST வரியால் வருவாய் இழப்பு: கார்கே வலியுறுத்தல்

GST வரி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அந்த இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். GST 2.0-வை வரவேற்பதாக தெரிவித்த அவர், 8 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு, தற்போது விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியை மறுசீரமைத்துள்ளதாக சாடினார். இதற்காக 10 ஆண்டுகளாக காங்., போராடி வந்ததாகவும் கூறியுள்ளார்.
News September 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
News September 6, 2025
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.