News May 28, 2024
மோடி தியானத்திற்கு அனுமதி தரக்கூடாது

குமரியில் பிரதமர் மோடி 2 நாள் தியானம் செய்யும் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக, மோடி மறைமுகப் பிரசாரம் செய்ய முயற்சிக்கிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
News September 6, 2025
பேரிடர் பாதித்த இடங்களை ஆய்வு செய்யும் PM மோடி

வட இந்தியாவில் ஏற்பட்ட மேகவெடிப்பு & வரலாறு காணாத கனமழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விரைவில் நேரில் பார்வையிட உள்ளதாக PM அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பேரிடர் நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
News September 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 6, ஆவணி 21 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை