News May 28, 2024
முட்டை விலை ₹5.20ஆக குறைந்தது

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் முட்டை விலை குறைந்ததால், அதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை, தற்போது சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு மொத்த விலையில் 5 ரூபாய் 80 காசுகளாக இருந்த ஒரு முட்டை விலை, தற்போது 5 ரூபாய் 20 காசுகளாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, வீட்டுச் செலவு சற்று குறையும் என இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 8, 2026
மாதா மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <
News March 8, 2026
NDA-வில் விஜய் இணைய வேண்டும்.. பாஜக விருப்பம்!

விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க, <<19326229>>AP DCM பவன் கல்யாண்<<>> முயற்சிப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில், விஜய், NDA கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ANS பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் தனது லட்சியம் என விஜய் கூறுவது உண்மை என்றால், அவர் தங்களோடு இணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது, அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
News March 8, 2026
சர்ச்சையில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம்!

இன்று WC T20I இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத் ஸ்டேடியத்தில்தான், 2023-ம் ஆண்டின் WC ODI இறுதிப் போட்டியும் நடைபெற்றது. ஆனால், அப்போது இந்திய அணி தோற்றதை போல, இம்முறை நடந்து விடக்கூடாது என்பதற்காக மைதானத்தின் ஆடுகளம் மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் இந்திய அணிக்கு உதவும் வகையில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாம்.


