News May 28, 2024
வி.கே.பாண்டியனை குறி வைக்கும் அமித் ஷா

ஒடிஷாவில், நவீன் பட்நாயக்கின் தனிச்செயலர் வி.கே.பாண்டியனை குறி வைத்து பாஜக காய் நகர்த்தி வருகிறது. ஒடிஷாவை தமிழர் ஆள வேண்டுமா? என அமித் ஷா கேள்வி எழுப்பியது பேசுபொருளானது. இந்நிலையில், இதே கருத்தை முன்வைத்து அவர் தொடர் பிரசாரம் செய்து வருகிறார். பிஜு ஜனதா தளம் வென்றால், தமிழரான வி.கே.பாண்டியன் முதல்வராவார் என்ற கருத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்.
Similar News
News March 12, 2026
கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

மக்களின் வாழ்க்கைமுறை, மரபணு & வானிலையை பொறுத்து சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரிக் ஆசிட் & தொற்றை ஏற்படுத்தும் ஸ்ட்ரூவைட் போன்றவையே சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும். சில பாக்டீரியா தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம். இவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. சிலருக்கு மரபணு ரீதியாகவும் சிறுநீரகத்தில் கற்கள் வருமாம்.
News March 12, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. கடைசிநேரத்தில் அறிவித்தார்

NDA கூட்டணியில் புதிய கட்சியாக முல்லை மக்கள் பேரவை இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற NDA கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் நாசே ராமச்சந்திரனும் பங்கேற்றார். இதனையடுத்து, வரும் தேர்தலில் NDA-வுக்கு முல்லை மக்கள் பேரவை ஆதரவளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸில் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த நாசே ராமச்சந்திரன், புதிய கட்சி தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2026
ஜனநாயகன் ஓடிடி உரிமம் ரத்தானதா?

சென்சார் சிக்கலால் விஜய்யின் ஜனநாயகன் ரிலீசில் தாமதம் நீடிக்கிறது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை ₹120 கோடிக்கு வாங்கிய சம்பந்தப்பட்ட நிறுவனம், ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், இதுபற்றி படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இதனிடையே, அடுத்த வாரம் ரிவைஸிங் கமிட்டி, படத்தை பார்த்து சென்சார் சான்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


