News May 28, 2024
கள்ளக்குறிச்சி: இலவச பயிற்சி வகுப்புகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை டிஎன்பிசி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுக வேண்டும் என ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
கள்ளக்குறிச்சி: மனைவிக்காக கணவன் எடுத்த விபரீத முடிவு!

கள்ளக்குறிச்சி: அம்மாபேட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் அண்ணாதுரைக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக, அவரது மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அண்ணாதுரை பூச்சிமருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 28, 2026
கள்ளக்குறிச்சி அருகே நடந்த கொடூர சம்பவம்!

கொடியனூரை சேர்ந்த கவிதா என்பவரது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்ததை கவிதா கவனிக்காத நிலையில் இதனை அவரது கணவர் மாசிலாமணி கண்டித்துள்ளார்.இதனால் மனமடைந்த கவிதா வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 28, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


