News May 28, 2024
ராணிப்பேட்டை அருகே விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (50). அரசு பஸ் கண்டக்டர். இவர் இன்று மதியம் கலவை டவுன் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தருவதற்காக வரும்போது சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது பைக் மோதி சம்பவ இடத்திலேயே ராமன் உயிரிழந்தார். கலவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
சோளிங்கர் நகர் மன்றத்தில் கவுன்சிலர் தர்ணா

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகர் மன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வியை கண்டித்து, திமுக பெண் கவுன்சிலர் மோகனா சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வார்டில் கால்வாய் டெண்டர் விடப்பட்டும், கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் தொடங்காததை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
News September 10, 2025
ராணிப்பேட்டை: குண்டர் சட்டத்தில் 5பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பேரில் இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட சுதாகர், ஆனந்த், வினித், பிரேம்குமார் ரிகன் சுரேஷ் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் குற்றங்களை குறைக்கவும் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.
News September 10, 2025
ராணிப்பேட்டை ஹோட்டல் சங்க மண்டல மாநாடு

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்பு மகாலில் இன்று தமிழ்நாடு ஹோட்டல் சங்கம், ராணிப்பேட்டை மாவட்ட ஹோட்டல் சங்கம் சார்பில் வேலூர் மண்டல மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.