News May 28, 2024

புதுகை அருகே 80 சவரன் திருட்டு!

image

புதுக்கோட்டையில் மாலையீடு தேவாலயத்தின் பாதிரியாராக ஜான்தேவசகாயம் என்பவர் இருந்து வருகிறார். இவரது மனைவி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வெளியூரில் இருந்து இன்று காலை வீடு திரும்பிய நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.இது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 24, 2025

பொன்னமராவதி: சோழீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

image

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை திங்கள் சோம வாரத்தை முன்னிட்டு, இன்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக சிவாச்சாரியர்கள் வழிநடத்த சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று, பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட 108 சங்குகளில் உள்ள புனிதநீர் மூலம் சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

News November 24, 2025

புதுக்கோட்டை: தேர்வு கிடையாது… ரயில்வே வேலை

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!