News May 28, 2024
திமுக செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிறப்புரை

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமையில் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 16, 2026
விழுப்புரம்: ‘HI’ போதும் வங்கி விபரங்கள் Whatsapp-இல்!

விழுப்புரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 16, 2026
விழுப்புரம்: பெண்ணின் கருப்பையில் 3 கிலோ கட்டி!

விழுப்புரம்: செவலபுரையைச் சேர்ந்த பெண் (30) ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது வயிறு பெரிதாக காணப்பட்ட நிலையில் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கருப்பையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ எடை கொண்ட கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
News January 16, 2026
விழுப்புரத்தில் பாஜக பெண் நிர்வாகிக்கு பளார்!

திண்டிவனத்தில் நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, திண்டிவனம் தொகுதி அமைப்பாளர் சந்திரலேகா எழுந்து, செயற்குழு உறுப்பினர் ராதிகா தன்னை தரக்குறைவாக பேசியதாக முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா, அவரை கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தனர்.


