News May 28, 2024
மாணவர்களை ஊக்கப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் தலைமையில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை ஊக்குவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய செயலி மூலம் மாணவர்களை கண்காணிப்பது மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 8, 2026
திருப்பூர்: டிகிரி போதும்., ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை!

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் இங்கு <
News March 8, 2026
பல்லடம் அருகே பயங்கர தீ விபத்து!

பல்லடம் அடுத்த அருள்புரம் பாச்சான்காட்டுபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் டையிங் நிறுவனத்தில் நேற்று திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து வேலை செய்து வந்த பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.
News March 8, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்! GOOD NEWS

திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்களுக்கு செப்டம்பர் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார். இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக அந்தந்த பிறப்புப் பதிவு அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு, ரூ.200 கட்டணம் செலுத்தி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


