News May 28, 2024

உலக பட்டினி தினத்தில் அன்னதானம்

image

திருவண்ணாமலையில் உலக பட்டினி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட தலைவர் பாரதிதாசன் அன்னதானம் வழங்கினார். இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News July 4, 2025

திருவண்ணாமலையில் 127 போலீசார் பணியிட மாற்றம்

image

தி.மலை மாவட்டத்தில் 127 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இருந்து 63 காவலர்கள் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றிய 64 ஏட்டுகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 4, 2025

தி.மலையில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் FINANCIAL ADVISER பணிக்கு 50 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில்<<>> பதிவு செய்துகொள்ளலாம். தி.மலையில் வேலை தேடுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News July 4, 2025

தி.மலை மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் 1/2

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <>இந்த லிங்க் மூலம் <<>>அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (9498111011) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.*இந்த எண்களை நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்* <<16937069>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!