News May 28, 2024

கரூர் பொன்னணியாறு அணை சிறப்புகள்!

image

கரூர், கடவூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளது பொன்னணியார் அணைக்கட்டு. இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் பெருமாள் மலைகளுக்கு இடையில், தும்பச்சி, மாமுண்டி, அறியாறு போன்ற ஆறுகளில் வெள்ளக்காலத்தில் ஏற்படும் நீர்ப்பெருக்கைத் தடுக்க 1975-ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. பாசன வசதிக்காக கட்டப்பட்ட இந்த அணை, பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது. 313 ஏக்கர் பரபபளவில் அமைந்துள்ள அணையின் உயரம் 51அடிகள் ஆகும்.

Similar News

News March 10, 2026

கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்ட எஸ்.பி உத்தரவின்படி, மார்ச் 10-ம் தேதி இரவு ரோந்து அதிகாரியாக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள 18 காவல் நிலையங்களுக்கும் தனித்தனியே கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன. கரூர் மற்றும் குளித்தலை உட்கோட்டங்களில் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சட்டம் ஒழுங்கை பராமரிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

கரூர்: ஒரு Hi போதும்., உங்க வங்கி விபரங்கள் WhatsApp-ல்!

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News March 10, 2026

கரூர்: Spam Calls தொல்லையா?.. இதற்கு இனி END CARD!

image

கரூர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!