News May 28, 2024
மாணவர்கள் தொடர்ந்து இலவசமாக பயணிக்கலாம்

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், புதிய வருடத்திற்கான இலவச பஸ் பாஸ்கள் வழங்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். இதனை கருத்தில் கொண்டு, பழைய பஸ் பாஸ் இருந்தலே அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பாஸ் இல்லாதவர்கள், பள்ளி வழங்கிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
Similar News
News August 23, 2025
மூத்த தலைவர் மறைவு..CM ஸ்டாலின் இரங்கல்

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதாகர் ரெட்டி தனது வாழ்க்கையை மக்களின் போராட்டங்களுக்காக அர்ப்பணித்ததாக குறிப்பிட்ட அவர், அவரது மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிக்கான போராட்டத்திற்கு அவரது வாழ்க்கை தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.
News August 23, 2025
2-வது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டா?

விவாகரத்து (அ) முதல் மனைவி இறந்தால் மட்டுமே, 2-வது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டு. ஆனால், சட்டப்பூர்வ பிரிவு இன்றி 2-வது திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் உரிமை உண்டு. இதில், முதல் மனைவியின் குழந்தைக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், 2-வது திருமணம் செய்யும் பெண்ணுக்கு, அதற்கு முன்பாக குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு 2-வது கணவரின் சொத்தில் உரிமை கிடையாது.
News August 23, 2025
Missed Call மூலம் PF பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி?

UAN எண் கைவசம் இல்லையா? பிரச்னையே இல்லை, மிஸ்டு கால் மூலமும் பிஎஃப் பேலன்ஸை நீங்கள் அறியலாம். இதற்கு, உங்கள் பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ஒரே ரிங்கில் கால் கட் ஆகிவிடும். இதனை அடுத்து உங்களுக்கு ஒரு SMS வரும் அதில் உங்களுடைய பிஎஃப் பேலன்ஸ் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். SHARE IT.