News May 28, 2024

தூத்துக்குடி வருகை தரும் இபிஎஸ்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தூத்துக்குடி வருகிறார். அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணிக்கு தூத்துக்குடி விமானம் நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

Similar News

News March 4, 2026

தூத்துக்குடி: கொலை வழக்கில் சிறுவனுக்கு நூதன தண்டனை

image

விளாத்திகுளம் குருவார்பட்டி சேர்ந்த முருகன் கடந்த 2018-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது தூத்துக்குடி இளம் சிறார் நீதிக் குழும முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் இளம் சிறார் 3 ஆண்டுகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் 8 மணி நேரம் சேவை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

News March 4, 2026

அமைச்சரின் சொத்து குறிப்பு வழக்கு ஓத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கினை மார்ச்.7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 3, 2026

தூத்துக்குடி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!