News May 28, 2024
விழுப்புரம்: இன்று இங்கெல்லாம் மின்தடை

அரசூர் துணைமின் நிலையத்துக்குட்பட்ட இருந்தை கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் நடைபெறும் பராமரிப்பு பணியின் காரணமாக அரசூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமண்டூர், பழைய பட்டினம், கிராமம், பொய்கை அரசூர், ஆணைவாரி ஆகிய கிராமப் பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 16, 2026
திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உலக பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை கௌரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜன.16 ம் தேதி திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வருவாய்த்துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
News January 16, 2026
விழுப்புரம்: ஆட்டோவில் செல்வோர் கவனத்திற்கு!

விழுப்புரத்தில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால்<
News January 16, 2026
விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!


