News May 28, 2024
விஜய்யுடன் கூட்டணி சேர விருப்பமில்லை

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் ‘தவெக’ கட்சி குறித்து கேள்வி எழுப்பும்போது எல்லாம் சீமான் வரவேற்று பேசுகிறார். அவருடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு ‘விஜய்யிடம் கேளுங்கள்’ என்கிறார். இதனை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. என்றைக்கும் தனித்துப் போட்டி என்ற கொள்கையின் படியே கட்சியை அண்ணன் வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Similar News
News March 7, 2026
மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

‘ஹெல்த் கான்ஷியஸ்’ என்ற பெயரில் சிலர் மதுவில் டயட் சோடாவை கலந்து குடிப்பார்கள். ஆனால், இது ஆபத்தை ஏற்படுத்தும் என ஓர் ஆய்வு எச்சரிக்கிறது. அதாவது, சாதாரண சோடாவை கலந்து குடிப்பவர்களை விட, டயட் சோடா கலந்து மது அருந்துவோரின் ரத்தத்தில் மிக விரைவாக ஆல்கஹால் கலந்து மிதமிஞ்சிய போதையை ஏற்படுத்தி விடுகிறதாம். டயட் சோடாவில் சர்க்கரை குறைவாக இருப்பதால், ரத்தம் விரைவாக ஆல்கஹாலை உறிஞ்சி விடுகிறதாம்.
News March 7, 2026
T20 WC: நாளை வருண் விளையாடுவாரா?

வருண் சக்ரவர்த்தி நாளை நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார், வருணின் ஃபார்ம் பற்றி தங்களுக்கு கவலையில்லை; நம்பர் 1 பவுலரான அவருக்கு அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது என்று தெரியும் என்று கூறினார். மேலும், லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து நாளை தெரியவரும் என்றார்.
News March 7, 2026
மகளிருக்கு ₹5 லட்சம்.. ஜாக்பாட் தேர்தல் அறிவிப்பு

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அடுக்கியுள்ளார். அதில் குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுகளில் உறுப்பினராக இருந்து MSME நிறுவனம் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது 100% மானியம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகளிர் நலனுக்காக தனி இலாகா தொடங்கப்பட்டு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.


