News May 28, 2024

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு வரவேற்பு

image

கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் ஆண்டுதோறும் 2 பேருக்கு ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகள் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபருக்கு 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். விருது பெற விரும்புவோர் சென்னை பி.எம்.பிர்லா கோளரங்கம் முதன்மை செயலாளர் என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியர் வாயிலாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

Similar News

News March 10, 2026

ராணிப்பேட்டை: கணிக்க முடியாத சோளிங்கர் தேர்தல்!

image

சோளிங்கர் தொகுதி எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தரக் கோட்டையாக இருந்ததில்லை. 2011-இல் தே.மு.தி.க, 2016-இல் அ.தி.மு.க, பின்னர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, 2021-இல் காங்கிரஸ் என மக்கள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கட்சிகளுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். இந்த முறை நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றி யாருக்கு மக்களே கமெண்ட்ல சொல்லுங்க.

News March 10, 2026

அரக்கோணத்தில் அதிரடி கைது!

image

ராணிப்பேட்டை; அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்குள்ள பெட்ரோல் பங் பகுதியில் பணம் வைத்து சூதாடியவர்களை கண்டனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். மடக்கி பிடித்த போது ஒருவர் சிக்கினார். விசாரணையில் அவர், சோகனூரைச் சேர்ந்த குமார்(37) என்பது தெரிய வந்தது.

News March 10, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!