News May 28, 2024
‘GOAT’ படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கும் விஜய்?

‘லியோ’ படத்தைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாக்ஷி சௌத்ரி நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மூன்று வேடத்தில் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Similar News
News August 21, 2025
சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் இல்லை

குண்டும், குழியுமாக இருக்கும் ரோட்டில் பயணிப்பதை விட அதற்கு செலுத்துவது தான் கட்டுவதுதான் கொடுமையானது. இந்த நிலையில்தான், கேரளாவில் சேதமடைந்து இருக்கும் NH-544 சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தரமான சாலை வசதியை NHAI, மக்களுக்கு அமைத்து தர வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இது அனைத்து டோல்கேட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்?
News August 21, 2025
ராசி பலன்கள் (21.08.2025)

➤ மேஷம் – அனுகூலம் ➤ ரிஷபம் – வெற்றி ➤ மிதுனம் – பகை ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – மகிழ்ச்சி ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – மேன்மை ➤ விருச்சிகம் – ஆர்வம் ➤ தனுசு – இன்பம் ➤ மகரம் – தேர்ச்சி ➤ கும்பம் – நன்மை ➤ மீனம் – முயற்சி
News August 21, 2025
விந்தணு மூலம் குழந்தைக்கும் பரவும்… ஆய்வில் அதிர்ச்சி!

ஒரு ஆண், சிறு வயதில் அனுபவிக்க நேரும் மன அதிர்ச்சியின் நினைவுகள், மரபணு மூலம் அவரது அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மன அதிர்ச்சியின் நினைவுகளால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் மற்றும் அழற்சி விளைவுகள், அவரின் விந்து செல்களின் மரபணுக்களில் பதிவாகி, அதன்மூலம் அவரின் குழந்தைக்கும் செல்கிறது. இதனால் குழந்தையின் மனநலமும் பாதிக்கலாம் என்கின்றனர்.