News May 28, 2024
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம்

தேர்தல் ஆணையம் நேர்மையான ஆணையமாக செயல்படுகிறதா? என சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மதவெறியைத் தூண்டும் வகையில் பிரதமர் பேசுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால், அவரிடம் விளக்கம் கேட்பதற்கு பதிலாக, பாஜக தலைவருக்கு கடிதம் எழுதுவதாக சாடினார். மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொள்ளத் தொடங்கியதாக விமர்சித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயம் அவசியம்!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை – கிராம்பு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவையானவை: இலவங்கப்பட்டை – கிராம்பு , தேன்/ பனங்கற்கண்டு ➤செய்முறை: இலவங்கப்பட்டை – கிராம்பு இரண்டையும் இடித்து, தண்ணீரில் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த அவசியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள். SHARE.
News March 10, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரிவு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. நேற்று காலை வர்த்தகத்தில் <<19333418>>பெரிய அளவில் குறைந்து<<>> மீண்டும் மாலை நேர வர்த்தகத்தில் 1 அவுன்ஸ் $5,170-ஐ கடந்தது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி $35 டாலர்கள் குறைந்து $5,135 ஆக உள்ளது. அதேநேரம், வெள்ளி விலை 1 அவுன்ஸ்-க்கு $3 உயர்ந்து $88 ஆக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இந்திய சந்தையில் இன்று வெள்ளி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
News March 10, 2026
கோடையில் உங்கள் மின் கட்டணத்தைக் குறைக்கனுமா?

✦டியூப்லைட் & குண்டு பல்புகளுக்கு பதிலாக LED பல்புகளை பயன்படுத்துங்கள் ✦முடிந்தவரை AC வெப்பநிலையை 24-26°C க்கு இடையே வைத்துக்கொள்ளுங்கள் ✦AC இயக்கத்தில் இருக்கும்போது குறைந்த வேகத்தில் விசிறியை இயக்கினால், அறை விரைவாக குளிர்ச்சியடையும் ✦15 நாட்களுக்கு ஒரு முறை AC காற்று வடிகட்டியை சுத்தம் செய்யுங்கள் ✦டிவி, லேப்டாப், மைக்ரோவேவ் போன்றவற்றை பயன்படுத்தாதபோது, முழுமையாக சுவிட்ச் ஆஃப் செய்யுங்கள்.


