News May 28, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

* நெல்லையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை 7 நாள்களுக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
* பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா வரும் 31ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகிறார்.
* +2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
* ஜெயலலிதா இந்துத்துவவாதி என்பது தொடர்பாக அதிமுகவினருடன் விவாதத்திற்கு தயார் – அண்ணாமலை
Similar News
News March 4, 2026
குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்: மநீம

திமுக கூட்டணிக்கு மநீம எப்படி வலுசேர்க்கும் என்ற தரவுகளை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்துள்ளோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான் என்றார். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை கோழி அடைகாப்பதை போல அடைகாத்து வருகிறோம் என்றும், குஞ்சு பொறிக்கும் போது உங்களுக்கே தெரியும் எனவும் கூறியுள்ளார்.
News March 4, 2026
இந்தி திணிப்பு புளித்துப் போன காமெடி: அண்ணாமலை

இந்தி திணிப்புக்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> தெரிவித்த கண்டனத்துக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். திமுக அரசுக்கு எதிர்ப்பு எழும்போது, பழைய தகரப் பெட்டியைத் திறந்து இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா என அவர் சாடியுள்ளார். புளித்துப்போன இந்தித் திணிப்பு காமெடி பண்ணாமல், உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசுவீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 4, 2026
1,000 ஆண்டுகளாக பெண்களை அனுமதிக்காத விசித்திர நகரம்!

இக்காலத்திலும் இப்படி ஒரு இடமா என அதிர்ச்சியுடன் கேட்கும் அளவிற்கு உள்ள இடம் தான் மவுண்ட் ஏத்தஸ். கீரிஸில் உள்ள இத்தீபகற்பத்தில் கடந்த 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு அனுமதி கிடையாதாம். ஏன் பெண் விலங்குகளுக்கு கூட அங்கு தடை உள்ளது. கிழக்கு மரபுவழி கிறிஸ்துவத்தின் மிக முக்கியமான ஆன்மிக மையமாக கருதப்படும் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


