News May 28, 2024

உறவுகளை பலப்படுத்திய இலவச பயணத் திட்டம்

image

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் குடும்ப உறவுகளுக்கு இடையிலான பிணைப்பை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், புனித யாத்திரைகள் செல்லவும், உறவினர்களை சந்திப்பதற்கும், வேலைக்கு செல்லவும் பெண்கள் இலவச பேருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். மேலும், பெண்களிடம் சேமிப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News November 26, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்தது

image

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹11,800-க்கும், சவரன் ₹640 உயர்ந்து ₹94,400-க்கும் விற்பனையாகிறது. <<18390417>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில், நேற்று சவரனுக்கு ₹1,600, இன்று ₹640 என 2 நாள்களில் மட்டும் ₹2,240 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. SHARE IT.

News November 26, 2025

தளபதி திருவிழா.. ஒரு டிக்கெட் இவ்வளவா?

image

விஜய் கடைசியா என்ன குட்டி கதை சொல்ல போறார் என்ற ஆர்வத்துடன் டிச. 27-ம் தேதி மலேசியாவில் தளபதி திருவிழா நடைபெறவுள்ளது. இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட் விலை குறித்த தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளிவந்துள்ளது. அதன்படி, மேடை அருகில் இருக்கும் சீட்டுக்கு (Level 1) ₹6400, அடுத்த கட்ட வரிசை சீட்டுகளுக்கு (Level 2) ₹4316, தூரமாக இருக்கும் சீட்டுகளுக்கு (Level 3) ₹2100 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

News November 26, 2025

திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

image

திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsapp-ல் ‘9552300009’ என்ற எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் செய்ய வேண்டும். டிசம்பர் 30- ஜனவரி 1 தரிசன தேதிகள் ஓப்பனாகும். அதில், விருப்பப்பட்ட ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே. இதை, டிசம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும்.

error: Content is protected !!