News May 27, 2024
பீர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

*வெயில் காலங்களில் மதுப் பிரியர்களால் அதிகம் அருந்தப்படும் பீர், உலகின் மிக பழமையான பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. *உலகின் முதல் பீரை தயாரித்தவர் ஒரு பெண் எனக் கூறப்படுகிறது. *உலகளவில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் பீர் 3ஆவது இடத்தில் உள்ளது. தண்ணீர், டீ ஆகியவை முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. *உலகில் பழமையான பீர் ஆலை ஜெர்மனியில் உள்ளது. சுமார் 1,000 ஆண்டுகளாக இந்த ஆலை செயல்பட்டு வருகிறது.
Similar News
News March 4, 2026
கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து… புதிய தேர்தல் அறிவிப்பு

மத்திய, மாநில அரசு வேலைகளில் இல்லாத குடும்பத்தினரின் குழந்தைகளின் மருத்துவம் பொறியியல் உள்பட அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் 50% கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
News March 4, 2026
கருணாநிதியால் கூட இதை செய்ய முடியல: விஜய்

தொடர்ந்து 2-வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை என விஜய் பேசியுள்ளார். திமுகவை தொடர்ச்சியாக 2-வது முறை ஆட்சிக்கு கொண்டுவர கருணாநிதியால் கூட முடியவில்லை என்ற அவர், நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என தெரிந்தே திமுக வாக்கு கொடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மோசடி ஆட்சியில் முன்மாதிரியான ஆட்சி; முக்கியமான ஆட்சி என திமுக அரசு மீது விஜய் விமர்சனம் வைத்துள்ளார்.
News March 4, 2026
80 லட்சம் இந்திய WhatsApp கணக்குகள் நீக்கம்!

WhatsApp முக்கிய மார்க்கெட்டாக இருக்கும் இந்தியாவில் சுமார் 81,79,740 கணக்குகளை முடக்கி இருப்பதாக WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. WhatsApp பயனர்களின் புகார்கள், இந்திய அரசின் அறிவுறுத்தல்கள் & விதிமீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.


