News May 27, 2024
தமிழ்நாட்டில் 9 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் இன்று 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 105 டிகிரி பாரன்ஹீட், மதுரையில் 101.12, திருச்சியில் 100.22, வேலூர் 103.83 பாரன்ஹீட், ஈரோடு மற்றும் திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகியுள்ளது. இனி வரும் நாள்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 8, 2026
புதுக்கோட்டை: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

புதுக்கோட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 8, 2026
ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை

திமுகவில் இணைந்த உடன், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்களுக்கு சீட் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மூத்த திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனால், MLA மகாராஜன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை தலைமை சமாதானம் செய்ய தொடங்கி இருக்கிறதாம்.
News March 8, 2026
மாதா மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <


