News May 27, 2024

குழந்தைகளுக்கு தரும் ஸ்நாக்ஸில் கவனம் தேவை!

image

குழந்தைகளுக்கு அதிகளவில் நொறுக்குத் தீனி கொடுக்கும் பெற்றோரா நீங்கள்? அப்படியானால், உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை நீங்களே கெடுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சுவைக்காக அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு சேர்க்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், உடல் பருமன், நீரிழிவு, ரத்த அழுத்த நோய்களை உண்டாக்கும் என கூறுகின்றனர். அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Similar News

News March 13, 2026

பங்குச் சந்தையில் ₹23.44 லட்சம் கோடி சரிவு

image

மேற்காசிய போர் தொடங்கியதிலிருந்து BSE Sensex 5,252 புள்ளிகள் (6.46%) சரிந்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி முதல் BSE-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு, ₹23.4 லட்சம் கோடி சரிந்து ₹4.40 லட்சம் கோடி ஆனது. முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக பங்குகளை விற்று வெளியேறியதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

News March 13, 2026

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வணிகர் சங்கம்

image

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விளக்கங்கள் கொடுத்த நிலையிலும், பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் வரை பெட்ரோல் விற்பனையாகும் நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் மீண்டும் விளக்கமளித்துள்ளது.

News March 13, 2026

கட்சியின் பெயரை இன்று அறிவிக்கிறாரா சசிகலா?

image

கடந்த பிப்.24-ல் புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்த சசிகலா, அண்ணா, MGR, ஜெ., படங்கள் இடம்பெற்ற கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளை சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று கட்சியின் பெயரை சசிகலா வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன பெயர் வைப்பார் என்று கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!