News May 27, 2024
இந்தியாவை குறி வைக்கும் பாக். சைபர் மோசடி கும்பல்

பாகிஸ்தானை சேர்ந்த Transparent Tribe என்ற சைபர் மோசடி கும்பல், இந்தியா தொடர்புடைய நிறுவனங்களின் இணையதளத்தை இலக்காக வைத்து ஹேக் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Python , Golang போன்ற இணைய மொழிகளைப் பயன்படுத்தி, டெலிகிராம், கூகுள் டிரைவ் உள்ளிட்ட இணைய சேவையைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மக்களவைத் தேர்தலில் சைபர் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 26, 2025
மலச்சிக்கல் பிரச்னை நொடியில் நீங்கும்..

மலச்சிக்கல் பிரச்னைக்காக விலையுயர்ந்த மருந்துகள் எடுத்தும் தீர்வு கிடைக்கலையா? ஆவாரம் பூ இதற்கு ஒரு சிறந்த நிவாரணம் என ஆயுர்வேத டாக்டர்கள் சொல்றாங்க. இரவில் தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆவாரம் இலை பொடி, ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு இவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். SHARE.
News November 26, 2025
விஜய்யை நம்பமுடியாது: செல்வப்பெருந்தகை

தவெக உடன் TN காங்., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யை நம்பி திமுக கூட்டணியிலிருந்து காங்., வெளிவர வாய்ப்பில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அந்த தகவல் உண்மை இல்லை என கூறிய அவர், காங்கிரஸில் இருக்கும் சிலர் சொல்வது கட்டுக்கதை என்றார். மேலும், TN-ல் திமுகவின் நம்பிக்கைக்குரிய கட்சியாக காங்., செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
News November 26, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $9 உயர்ந்து, $4,141-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (நவ.25) மட்டும் சவரனுக்கு ₹1,600 உயர்ந்து, ₹93,760-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


