News May 27, 2024
எடியூரப்பா மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் மரணம்

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டிய பெண் உயிரிழந்தார். 53 வயதான அந்தப் பெண், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Similar News
News March 19, 2026
காலம் வேறு… காட்சி வேறு!

இன்று டெல்லி சென்றுள்ள EPS, தன்னை சந்திக்க அமித்ஷா இன்னும் <<19425630>>நேரம் ஒதுக்கவில்லை<<>> என்றார். காலச்சக்கரத்தில் 1998-ஐ ரீவைண்ட் செய்யுங்கள். ஜெயலலிதாவின் ஆதரவு கடிதத்துக்காக வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பல மணிநேரம் காத்துக் கிடந்தனர். இதனால் பதவியேற்பும் தாமதமானது. வாஜ்பாய் தூதராக அதிமுகவின் ஆதரவை கேட்டு போயஸ் கார்டன் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை நீண்டநேரம் காக்கவைத்தே சந்தித்தார் ஜெயலலிதா. வரலாறு!
News March 19, 2026
BREAKING: ரம்ஜான் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு

தமிழகம், புதுச்சேரியில் வரும் 21-ம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இரு மாநில அரசுகளின் தலைமை காஜிகளும் அறிவித்துள்ளனர். வழக்கம் போல், இன்று மாலை பிறை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று பிறை தென்படாததால் வரும் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 19, 2026
Summer Tips: சூட்டைத் தணிக்க இத ட்ரை பண்ணுங்க…!

<<19427290>>கோடைக்காலம்<<>> தொடங்கிவிட்டாலே, சூட்டைத் தணிக்க தர்பூசணி, இளநீர் கடைகளை நோக்கித்தான் மக்கள் படையெடுப்பார்கள். இவற்றை விடவும் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுவது பாதாம் பிசின்தான். இரவு ஊறவைத்த பாதாம் பிசினை, காலையில் பால், மோர் உள்ளிட்ட பானங்களில் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும், ஜீரணக் கோளாறை சரிசெய்யவும் இது ரொம்பவே உதவியாக இருக்குமாம்.


