News May 27, 2024
மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயில் சிறப்புகள்!

108 திவ்ய தேச தலங்களில் 26ஆவது திவ்ய தேசமான பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தல புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரங்களைக் கொண்டது. இந்த இராஜ கோபுரமானது 250 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதன் விமானம் வேத சக்ர விமானம் ஆகும். கருவறையில் 12 அடியில் பச்சை நிறத்தில் பெருமாள் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
Similar News
News August 21, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டு குடிநீர் நிறுத்தம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு பணிகள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. ஆகையால் இத்திட்டத்தில் பயன்பெறும் சீர்காழி மற்றும் செம்பனார்கோயில் ஒன்றியங்களை சேர்ந்த 30 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21), நாளை குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
மயிலாடுதுறை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் நாளை (ஆக.22) காலை 9 மணி முதல் 3மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பவுள்ளனர். மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை சேர் பண்ணுங்க.!