News May 27, 2024
தந்தையுடன் இணைந்தார் நடிகர் விஜய்

அரசியல் வருகைக்கு பிறகு முதல்முறையாக நடிகர் விஜய் பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக தந்தை எஸ்.ஏ.சி உடன் விஜய் பேசிக்கொள்ளவில்லை. இதற்கிடையில் விஜய்யின் அரசியல் வழிகாட்டியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் குறித்தும் எஸ்.ஏ.சி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், இச்சந்திப்பு அரசியல் ரீதியாகவும், குடும்ப உறவு ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Similar News
News September 17, 2025
ADMK அதிருப்தி தலைகளுக்கு ‘NO’ சொன்ன அமித்ஷா?

அதிமுக அதிருப்தி தலைவர்கள் யாரையும் இனி சந்திக்க மாட்டேன் என EPS-க்கு, அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் முகாமிட்டுள்ள EPS, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது, திமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள், டாஸ்மாக் முறைகேடு குறித்த விசாரணையை வேகப்படுத்தவும் EPS வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
News September 17, 2025
BREAKING: சங்கர் கணேஷ் ஹாஸ்பிடலில் அனுமதி

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான சங்கர் கணேஷ்(81) மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூரில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் பாடல் பாட புறப்பட்ட அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ள சங்கர் கணேஷ், குருசாமி, பூவெல்லாம் கேட்டுப்பார், நாய் சேகர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
News September 17, 2025
உங்க போனின் ஹெல்த்தை கண்டீசனை அறிய..

போன் பிராண்டுகளின் ரகசிய குறியீடுகள்:
•Google Pixel: *#*#7287#*#*
•Samsung: *#0*#
•OnePlus: *#*#4636#*#*
•RealMe: *#899#
•Oppo: *#800# (or) *#*#800#*#*
•Vivo: *#*#4636#*#*
•Xiaomi: *#*#64663#*#* (or) *#*#6484#*#*
•Motorola: *#*#2486#*#*
இந்த முக்கியமான செய்தியை, உங்கள் நண்பர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.