News May 27, 2024
மோடி 25 மகாராஜாக்களை உருவாக்கியுள்ளார்

பிரதமர் மோடி மக்களுக்காக உழைக்காமல் தொழிலதிபர்களுக்காக உழைப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் 25 மகாராஜாக்களை உருவாக்கியுள்ளதாகக் கூறிய அவர், அதானி, அம்பானி என்பதே அவர்களின் புதிய பெயர். அவர்களுக்காகவே 24 மணி நேரமும் மோடி உழைக்கிறார் என்றார். மேலும், நாட்டு மக்களை நினைக்க மறந்த அவருக்கு, தேர்தலில் சரியான பாடம் கற்பிக்கப்படும் எனவும் சூளுரைத்தார்.
Similar News
News March 5, 2026
நாதகவை பார்த்து பலருக்கு கண்ண உறுத்துது: சீமான்

இன்று அரசியல் என்பது அரிசியும், பருப்பும், வேட்டியும், சேலையும், ஆயிரமும், ஐநூறுமாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார். 100 ரூபாயை கொடுத்துவிட்டு ₹200-க்கு விளம்பரம் செய்வதாக கூறிய அவர், இந்த அரசியலை மாற்ற வேண்டும் என்றார். மேலும், நாதக தனித்து போட்டியிடுவது பலருக்கு கண்ணை உறுத்துகிறது எனவும், கூட்டணி வைக்காமல் எப்படி ஜெயிக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் சவால்விட்டிருக்கிறார்.
News March 5, 2026
யாரோ ஏவி விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்: அமைச்சர்

விஜய் சுயமாக அரசியலுக்கு வரவில்லை; யாரோ ஏவி வந்திருக்கிறார் என்று அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார். ஊழலுக்கு எதிரானவர் போல் காட்டிக்கொள்ளும் விஜய், பத்தாண்டுக் காலம் ஆட்சி பொறுப்பில் இருந்து ஊழல் செய்த அதிமுகவை விமர்சிக்கவில்லை; மாநில உரிமையை பறிக்கும் பாஜகவை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தமிழக மக்களுக்கு நன்மை செய்கின்ற திமுகவை மட்டும் தாக்குகிறார் என்று விமர்சித்தார்.
News March 5, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தங்கம் விலை இன்றும் (மார்ச் 5) மளமளவென குறைந்துள்ளது. இதன்படி, 1 கிராம் தங்கம் ₹80 குறைந்து ₹15,120-க்கும், 1 சவரன் ₹640 குறைந்து ₹1,20,960-க்கும் விற்பனையாகிறது. போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேளையில், இந்திய சந்தையில் தங்கம் விலை குறைந்து வருகிறது.


