News May 27, 2024
எய்ம்ஸ் செங்கல்லை திருப்பி எடுத்து வருவாரா உதயநிதி?

மதுரை எய்ம்ஸ் பணி ஆரம்பிக்காமல் இருந்தபோது, அங்கிருந்து எடுத்த செங்கல்லை காட்டி உதயநிதி பிரசாரம் செய்தது வரவேற்பை பெற்றது. செங்கல்லை தூக்கிச் சென்றுவிட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியபோது, வேலையை தொடங்குங்கள் செங்கல்லை திருப்பி எடுத்து வருகிறேன் என உதயநிதி பதிலளித்தார். அண்மையில் பணி தொடங்கிய நிலையில், சொன்னபடி செங்கல்லை திருப்பி எடுத்து வருவாரா? என பாஜகவினர் கேட்கின்றனர்.
Similar News
News March 20, 2026
ரமலான் வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின்

நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றும் அரணாக திமுக அரசு திகழ்ந்து வருகிறது; எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் திமுக அரசு அனைவரது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்துள்ளது எனவும் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
News March 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகியது!

திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறியுள்ளது. கூடுதல் தொகுதிகள் கேட்டதற்கு இதுவரை திமுகவிடம் இருந்து பதில் வராததால் இம்முடிவை இக்கட்சி எடுத்துள்ளது. நாளை மறுநாள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிடவுள்ளாராம். இதற்காக அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடனும் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தவாகவின் இந்த முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?
News March 20, 2026
பாலியல் புகாரில் மதூர் சத்யா கைது

பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யா கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகாரை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் AIYF, ISCUF ஆகிய அதன் துணை அமைப்புகளில் இருந்து <<19403605>>சத்யா நீக்கப்பட்டார். <<>>இந்நிலையில் பெங்களூருவில் அவர் கைதானதை அடுத்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


