News May 27, 2024

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டம்

image

அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பள்ளிகளுக்கு அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து ஜூன் முதல் உணவு விநியோகிக்கவும், பயனாளிகளுக்கு உணவு வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்கவும், தட்டு, டம்ளர் உள்ளிட்ட உபகரணங்களை ஏற்பாடு செய்யவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

திறக்காத 5 கதவுகள்

image

உலகில் தற்போதுவரை பல விஷயங்கள் தெரியாமல் உள்ளன. வரலாறு தொடர்புடைய சில இடங்களில் என்ன இருக்கிறது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. பயத்தில் சில இடங்கள் மூடப்பட்டு இருக்கிறது. அதுபோன்று உலகின் இதுவரை திறக்கப்படாத 5 கதவுகள் என்ன என்று போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதை தவிர வேறேதும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 17, 2025

BREAKING: நடிகர் ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார்

image

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில், தனியார் TV நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பின்போது ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். ஏற்கெனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தது கவனிக்கத்தக்கது.

News September 17, 2025

ASIA CUP: பும்ரா இடத்தில் யார்?

image

UAE மற்றும் பாகிஸ்தானுடனான ஆட்டங்களில் பெற்ற அசத்தலான வெற்றிகளின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில், ஓமனுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அர்ஷ்தீப், ஹர்சித் ராணா ஆகிய இருவரில் ஒருவருக்கு ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம்.

error: Content is protected !!