News May 27, 2024

இத்தாலி டூ பிரான்ஸ்: அம்பானி வீட்டுக் கல்யாண கொண்டாட்டம்

image

பாகுபலி 2, ரோபோ 2 போல ஆனந்த் – ராதிகா Pre Wedding கொண்டாட்டம் இரண்டாம் பாகமாக இத்தாலியில் நடைபெறவுள்ளது. நாளை தொடங்கி 30ஆம் தேதிவரை நடக்கும் இந்தக் கொண்டாட்டம் சொகுசு கப்பலில் 4,380 கி.மீ., (இத்தாலி – பிரான்ஸ்) பயணப் பார்ட்டியாக திட்டமிடப்பட்டு உள்ளது. எதிர்காலத்துக்கான பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தில் சல்மான், தோனி போன்ற 800 பிரபல விருந்தினர்கள், 600 பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Similar News

News March 6, 2026

மீண்டும் போடியில் OPS போட்டியா?

image

தேனி போடிநாயக்கனூரில் OPS போட்டியிட, மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார். அத்துடன் போடி, கம்பம் (அ) ஆண்டிபட்டியில் தான் போட்டியிடவும் அவர் விருப்பமனு பெற்றுள்ளார். 2021-ல் தேனியில் 3 தொகுதிகளில் திமுக வென்றபோதும், போடியில் OPS வென்றார். தன்னுடைய சமூக மக்கள், உறவினர் அதிகமிருக்கும் பகுதி என்பதால், இம்முறை திமுக சார்பாக போட்டியிட்டாலும் OPS வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

News March 6, 2026

42 பற்களை கொண்ட மனிதன்.. கின்னஸ் உலக சாதனை!

image

32 பற்களை கொண்டவன் மனிதன் என்றால், இவர் ஒரு அசாத்திய மனிதனே. மலேசியாவை சேர்ந்த பிரதாப் முனியாண்டி(33) என்பவருக்கு மொத்தமாக 42 பற்கள் உள்ளதாம். மேல் வரிசையில் 20 பற்களும், கீழ் வரிசையில் 22 பற்களும் உள்ளதாம். இவரின் அதிசயத்தை ‘அதிக பற்களை கொண்ட நபர்’ என கின்னஸும் அங்கீகரித்துள்ளது. அவரின் போட்டோக்களும் வைரலாகி இருக்கும் நிலையில், மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News March 6, 2026

TN-ல் சினிமா ஒரு மதம் போல மாறிவிட்டது: சீமான்

image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என கேட்கும் அளவுக்கு சாதாரணமாக யாரையும் கொலை செய்யும் அவல நிலை இருப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். நல்லாட்சி என்பது சொல்லில்தான் உள்ளது, செயலில் இல்லை என்ற அவர், மாநில உரிமையை பறிகொடுத்தவர்களே, மாநில உரிமை பற்றி பேசுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சினிமா என்பது மதம் போல ஆகிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!