News May 27, 2024

திருவண்ணாமலை பருவதமலை சிறப்பு!

image

பருவதமலை, கடலாடி தென்மகாதேவமங்கலம் கிராமங்களையொட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இந்த மலை நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை என்று அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்த மலையின்மேல் அமைந்துள்ள மல்லிகார்ஜுனர் கோயில் கிபி 3ஆம் நூற்றாண்டில் குறுநிலமன்னனான நன்னன் கட்டியதாக இக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

Similar News

News August 20, 2025

தி.மலை: பள்ளி மாணவிகளுக்கு ரூ-1000 ஊக்கத்தொகை

image

தி.மலை (ஆக்-20) பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக கிராமப்புற சிறுபான்மையின பள்ளி மாணவியர்களுக்கு மாதம் 1000 வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3-வகுப்பு முதல்5- வகுப்பு வரை மாணவியருக்கு ரூ-500 6ஆம் வகுப்பு மாணவிக்கு ரூ-1000 ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கல்வியின் இடைநிற்றலை குறைக்க திட்டம்.

News August 20, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

தி.மலை: மாதம் 90,000 வரை சம்பளத்தில் வேலை

image

தி.மலை: BANK OF MAHARASHTRA வங்கியில் நிரந்திர பணியாளராக பணி செய்ய ஒரு வாய்ப்பு. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 22வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஆகஸ்ட் 30க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கட்டணமும் இருக்கிறது. இதற்கு மாதம் 60,000-90,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து தேர்வு அதன் பின் நேர்முக தேர்வும் நடத்தப்படும், வேலை தேடும் நண்பர்களுக்கு பகிரவும்

error: Content is protected !!