News May 27, 2024

கோலி மீது ராயுடு மீண்டும் விமர்சனம்

image

ஐபிஎல்லில் 741 ரன் குவித்து கோலி ஆரஞ்ச் தொப்பி வென்றுள்ளார். இதை மறைமுகமாக சிஎஸ்கே அணி முன்னாள் வீரர் ராயுடு விமர்சித்துள்ளார். ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள கொல்கத்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஆரஞ்ச் தொப்பி கோப்பையை வென்று தராது, 300 ரன்களே கோப்பையை கைப்பற்றித் தரும் எனக் கூறினார். சுயநலத்துக்காக கோலி விளையாடுவதாக அவர் ஏற்கெனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 20, 2026

பாட்டில்ல பால் கொடுக்காதீங்க மம்மி!

image

குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் கொடுப்பது என்பது வழக்கம்தான். ஆனால், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். பாட்டில் பாலை குடிக்க குழந்தைகள் நீண்ட நேரத்தை எடுத்து கொள்வதால், பாலிலுள்ள சர்க்கரை பற்களில் ஒட்டி பாக்டீரியா உருவாக வாய்ப்புள்ளது. அதனால் கப்பில் உணவை கொடுப்பதே சிறந்ததாம். SHARE IT.

News March 20, 2026

ஏப்.1 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஏப்.1-ம் தேதி (புதன்கிழமை) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது என கலெக்டர் அறிவித்துள்ளார். இதனை ஈடுசெய்ய ஏப்.11 (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லைக்கும் ஏப்.1-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2026

பிரீமியம் பெட்ரோல் என்றால் என்ன?

image

இன்ஜினில் பெட்ரோல் எவ்வளவு smooth-ஆ வேலை செய்கிறது என்பதை காட்டும் அளவுகோலை Octane number என குறிப்பிடுவார்கள். இந்த Octane number சாதாரண பெட்ரோலை விட, பிரீமியம் பெட்ரோலில் அதிகமாக இருக்கும். Octane அதிகமாக இருப்பதால், இன்ஜின் Smooth-ஆகவும், அமைதியாகவும் இயங்கும். மேலும், இன்ஜினின் efficiency-ம் மேம்படும். அதிக திறன் இன்ஜின்களை கொண்ட வாகனங்களுக்கு பிரீமியம் பெட்ரோல் பொருத்தமானது.

error: Content is protected !!