News May 27, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹520 உயர்வு

image

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்துள்ளது. நேற்று ₹53,240க்கு விற்ற ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹53,760க்கு விற்பனை ஆகிறது. கிராம் ஒன்று ₹65 உயர்ந்து, ₹6,720க்கு விற்பனை ஆகிறது. 24 கேரட் சொக்கத் தங்கத்தின் விலை ₹7,190ஆக உள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ₹1.50 உயர்ந்து ₹97.50க்கு விற்பனை ஆகிறது.

Similar News

News March 10, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு!

image

தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹15,050-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹1,20,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இன்று காலை சரிந்த தங்கம், தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

News March 10, 2026

அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்த சீனா

image

ஈரானின் புதிய உச்சத் தலைவராக யார் வந்தாலும் குறிவைப்போம் என அமெரிக்கா, இஸ்ரேல் கூறும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்ற சீனா, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. மேலும், அனைத்து தரப்பினரும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

News March 10, 2026

சாதி, மதம் பார்த்து ஓட்டு போடாதீங்க: துரை வைகோ

image

சாதி, மதப் பெருமைகளை பேசுவதாலும், இன்னொரு சாதியை திட்டுவதாலும் எந்த பயனும் கிடையாது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். சாதி, மதங்களை கடந்தும், அரசியல் வேறுபாடுகளை கடந்தும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், சாதி, மதம் பார்ப்பது மதிமுக வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு ஓட்டுப் போடாதீங்க; நல்ல தலைவர்களைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!