News May 27, 2024
இருவேறு விபத்துகளில் 8 பேர் பலி

ஆந்திர மாநிலம் பாப்புலபாடு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாமிநாதன், ராகேஷ், ராதாபிரியா, கோபி ஆகியோர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றொரு கார் விபத்தில் நெல்லூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். திருப்பதிக்குச் சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
தவெகவுக்கு ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை

ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு மன வலிமை இல்லை என்று பேசியதற்காக ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கூறினர். தவறும் பட்சத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள ரஜினி ரசிகர்களும் தவெகவிற்கு எதிராக பூத் அளவில் போர்க்கொடி தூக்குவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News March 16, 2026
ஆஸ்கர் விருது வென்ற இந்திய வம்சாவளி இயக்குநர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரே சிங் தற்போது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது மனைவி Natalie Musteata உடன் இணைந்து இவர் இயக்கிய ‘Two People Exchanging Saliva’ என்ற பிரெஞ்சு குறும்படம் Best Live Action Short Film பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிரான்ஸின் போர்டோ நகரில் பிறந்த இவர், The Appointment (2019), Plan large (2016) போன்ற குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
News March 16, 2026
விஜய் கட்சியில் இணைந்தார்.. டிடிவி தினகரன் அதிர்ச்சி

தேர்தலையொட்டி மாற்றுக் கட்சி நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அமமுகவின் திருவள்ளூர் மாவட்ட அவைத் தலைவர் சு.சம்பந்தம் தவெகவில் இணைந்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இது தேர்தல் நேரத்தில் TTV தினகரன் தரப்புக்கு பின்னடைவாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.


