News May 27, 2024

நீலகிரியில் சிக்கியது சிறுத்தை

image

கூடலூர் அருகே சேமுண்டி கிராமத்தைச் சேர்ந்த பாபச்சன் என்பவரது தோட்ட வீட்டில் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இதைப் பார்த்தவர்கள் வீட்டின் கதவை வெளியே தாழிட்டுவிட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை மருத்துவர் ராஜேஷ்குமார் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மயக்கம் அடையச் செய்தார். பின்னர் நேற்று வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு வாகனத்தில் முதுமலை காப்பகம் வனப்பகுதியில் விடுவித்தனர்.

Similar News

News August 18, 2025

நீலகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (19.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் குஞ்சப்பனை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு, போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இசேவை, ஆதார் சேவை, மருத்துவ சேவை என அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க உள்ளதால் இப்பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News August 18, 2025

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண நிதி

image

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பல்வேறு விபத்துகளில் பெருங்காயம் அடைந்த ஆறு நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 50,000 காசோலை பயனாளிகளுக்கு வழங்கினார்.

News August 18, 2025

நீலகிரி: டிகிரி முடித்திருந்தால் ரூ.1 லட்சம் சம்பளம்!

image

நீலகிரி மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும்.

error: Content is protected !!