News May 27, 2024

சென்னை ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் வந்த மிரட்டல் மின்னஞ்சலால் அலர்ட்டான போலீசார், உடனடியாக மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, புரளி கிளப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

தன்மானம் பேசிவிட்டு டெல்லி ஏன் செல்ல வேண்டும்? TTV

image

தன்மானம் தான் EPS-க்கு முக்கியம் என்றால், டெல்லி செல்ல வேண்டிய அவசியம் என்ன என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவால் EPS-ன் ஆட்சி காப்பாற்றப்படவில்லை எனவும், கூவத்தூரில் அதிமுக MLA-க்கள் வாக்களித்ததால் தான் அவர் CM ஆனார் என்றும் TTV விமர்சித்துள்ளார். மேலும், தன்னை CM வேட்பாளர் என்றால் யாரும் ஓட்டு போடமாட்டார்கள் என்று கூவத்தூரில் கூறியவர்தான் EPS என்றும் சாடியுள்ளார்.

News September 17, 2025

அழகில் மயக்கும் அனீத் படா

image

‘சையாரா’ என்ற பாலிவுட் காதல் திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உணர்ச்சி மிக்க காதல் கதை கொண்ட ‘சையாரா’ கிளர்ச்சியூட்டும் இசையையும் கொண்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகை அனீத் படாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. அனீத் படாவின் அழகிய போட்டோஸ் மேலே இணைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்களுக்கு அனீத் படாவை ஏற்கெனவே தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 17, 2025

இன்றைய போர்களை கணிக்க முடியவில்லை: ராஜ்நாத் சிங்

image

கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்தியல், உயிரியல், கண்ணுக்கு தெரியாத சவால்களை எதிர்கொள்ள நமது ஆயுத படைகள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இன்றைய போர்கள் திடிரென ஏற்பட்டு, கணிக்க முடியாதவையாக மாறுவதாகவும், எனவே நமது எழுச்சித் திறன்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!