News May 27, 2024

56 அங்குல மார்பு எங்கே போனது?

image

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தபோது, பிரதமர் மோடி மௌனம் காத்து வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். ரோரு நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “நாட்டின் எல்லையைப் பாதுகாக்க நாங்கள் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் போரிட்டோம். பாஜக ஆட்சியில், சீனா இந்திய நிலப்பகுதியில் வீடுகளை கட்டி வருகிறது. 56 அங்குல மார்பு எங்கே போனது என்றே தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 5, 2026

T20 WC: இந்திய அணி பேட்டிங்!

image

பெரும் பரபரப்புக்கிடையே வான்கடேவில் நடக்கும் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. இரண்டு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 5, 2026

தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் அறிவிப்பு

image

தவெகவில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் மாநில அளவிலான 11 நிர்வாகிகளை புதிதாக விஜய் நியமித்துள்ளார். அந்த வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் மகளிர் படையின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

News March 5, 2026

இந்தியா பைனலுக்கு செல்லாது: பாகிஸ்தான் வீரர்

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோற்கும் என பாக்., Ex வீரர் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என அவர் கூறியுள்ளார். இத்தொடரில் இங்கிலாந்து அணி கடினமான சூழ்நிலைகளை கண்டுள்ளது என்றும், இந்தியாவை தோற்கடிக்க ஒரே ஒரு இங்கிலாந்து வீரர் சிறப்பாக செயல்பட்டாலே போதும் எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!