News May 27, 2024
ஆதார் அட்டை செல்லாது என்பது வதந்தி

10 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டால், ஜூன் 14க்கு பிறகு செல்லாது என வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என UIDAI தெரிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தில், ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டாலும் அவை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஆதார் விவரங்களை புதுப்பிக்க ஜூன் 14 வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 8, 2026
TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.
News March 8, 2026
விஜய் மனைவிக்கு திமுகவில் முதல் ஆதரவு வந்தது

விஜய் மனைவி சங்கீதாவுக்கு திமுகவில் இருந்து வெளிப்படையாக ஆதரவு வந்துள்ளது. சங்கீதாவிற்கு அவரது கணவர் வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது; காவல்துறையின் உதவியுடன் வீட்டிற்குள் நுழையலாம், அதனை கணவரால் (விஜய்) தடுக்க இயலாது என்று திமுக எம்பியான சல்மா கூறியுள்ளார். விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
News March 8, 2026
பெண்களின் அட்வைஸை கொஞ்சம் கேளு ப்ரோ!

பெண்களின் ஆலோசனையை கேட்கும் ஆண்களுக்கு சிந்தனை திறன் மேம்படும் என்று ஆய்வு கூறுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் லாஜிக்குடன், அமைதியாக சிந்திக்கிறார்களாம். அதனால், எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தங்கள் கண்ணோட்டத்தில் இருந்து அளிக்கும் ஆலோசனையை கேட்டால், அது ஆண்களுக்கு இன்னும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் என ஆய்வில் சுட்டிக்காட்டுகின்றனர். இனி கேளுங்க பாஸ்!


