News May 27, 2024

பாஜகவின் கனவு பலிக்காது

image

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது என புதுவை முன்னாள் முதல்வர் நாராயண சாமி தெரிவித்துள்ளார். 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று INDIA கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற அவர், காங்கிரஸ் ஆட்சியில் ராமர் கோயிலை இடிப்பார்கள் என்ற பொய்யை பாஜக கூறுவதாக குற்றம் சாட்டினார். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னை சங்கி என்று நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News

News March 17, 2026

பள்ளியிலேயே மாணவிகள் மது குடிக்கும் காட்சி..EPS வேதனை

image

சென்னையில் திமுக ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பேசிய EPS, திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒட்டுமொத்த TN மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சட்டினார். பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்டு சாடிய அவர், பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் காட்சியை பார்க்கையில் வேதனையளிப்பதாக தெரிவித்தார். மேலும், கிட்னி திருட்டு, மணல் கொள்ளையை திமுக அரசு தடுக்கவில்லை என்றார்.

News March 17, 2026

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்.. ஹேப்பி நியூஸ்

image

ஜூன் மாதம் வரையிலான ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை மாநிலங்கள் முன்கூட்டியே எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோதுமை, அரிசி ஏப்.1 வரைக்குமான தேவைப்படும் கையிருப்பு அளவை விட சுமார் 185% அதிகமாக இருக்கிறது. அதிக அளவு தானியங்கள் இருப்பு உள்ளதாலும், அடுத்த சில வாரங்களில் புதிய கோதுமை கொள்முதல் தொடங்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

News March 17, 2026

இலங்கையில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்கள்

image

போர் பதற்றத்தால் இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்கள் ஆகும். அதேபோல், 2022-ல் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின்போது கொண்டுவரப்பட்ட QR Code முறை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் பைக்குகளுக்கு வாரத்திற்கு 5 லிட்டர், கார்களுக்கு 15 லி மட்டுமே எரிபொருள் கிடைக்கும்.

error: Content is protected !!