News May 26, 2024
மதுரை விமான நிலைய பார்க்கிங் தானியங்கிமயமாகிறது

மதுரை, விமான நிலைய இயக்குநர் பி.முத்துக்குமார் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) உத்தரவின்படி, மதுரை விமான நிலையத்தில் ‘தானியங்கி வாகன பார்க்கிங் மேலாண்மை முறை’ மற்றும் புதிய வாகனங்கள் நிறுத்தும் கட்டணம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
மதுரையில் 13, 14ம் தேதிகளில் தாயுமானவர் திட்டம்

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மாதத்திற்கான குடிமை பொருட்கள் வரும் 13, 14ம் தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் வரும் மாதங்களில் மாதத்தின் 2வது சனி & ஞாயிற்றுக்கிழமைகளில் தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளளது.
News September 11, 2025
BREAKING மதுரை: பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

எல்.கொட்டாணிபட்டி கிராமத்தில் நான்கு வழிச்சாலை அருகே பாதுகாப்பற்ற நிலையில் கிணறு ஒன்று உள்ளதாகவும், அதனை உடனடியாக மூட வேண்டும் என பேரையூர் வட்டாட்சியர் செல்லபாண்டியனிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கிணற்றை இன்று மாலை ஆய்வு செய்ய வந்தபோது, கிணற்றில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 11, 2025
எங்கள் வழி தனி வழி – டிடிவி தினகரன்

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்; தேவையென்பதை உணர வேண்டும். செங்கோட்டையன் உள்ளிட்ட யார் எடுக்கிற முயற்சியும் நடக்காது என்பது எனக்கு தெரியும். பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனியாக தான் இருக்கும். எங்கள் வழி தனி வழி நாங்கள் அமைகின்ற கூட்டணி தான் ஆட்சியில் அமர போகிற கூட்டணி என்றார்.